நாகர்கோவில் அக் 30
நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி தலைமையில் மாவட்ட ஆட்சியர் வழியாக தமிழக முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டது மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான மணவாளகுறிச்சி I.R.E.L INDIA நிறுவனத்தை பாதுகாக்கவும் இதன் செயல்பாட்டை முடக்கும் விதத்தில் வீண் வதந்திகளை பரப்பி நடத்தப்படும் போராட்டத்தை தடுக்கவும் தமிழக அரசால் வழங்கப்பட்ட தாது மணல் எடுக்கும் செயலை செயல்படுத்தவும் கருத்து கேட்டு கூட்டம் நடத்த வேண்டும் என்று கூறி மாவட்ட ஆட்சித் தலைவர் வழியாக தமிழக முதல்வருக்கு மனு கொடுக்கப்பட்டது. இதில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் தர்மராஜ், பாரதிய மஸ்தூர் சங்க மாநில செயற்குழு உறுப்பினரும் I.R.E.I யூனியன் சங்க தலைவருமான முருகேசன், இந்து முன்னணி முன்னாள் கோட்ட செயலாளர் மிஷா சோமன், விசுவ ஹிந்து பரிஷத் மாநகரத் தலைவர் நாஞ்சில் ராஜா,
ஆலங்கோட்டை ரூபின் ஆகியோர் உடன் இருந்தனர்.