கன்னியாகுமரி அக் 29
குமரி மாவட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கூட்டம் மாவட்டச் செயலாளர் தா.சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட துணைச் செயலாளர்கள் எஸ். அனில்குமார், ஜி.சுரேஷ் மேசியதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முன்னாள் பஞ்சாயத்து தலைவரும் மாவட்டக்குழு உறுப்பினருமான வி.அருணாசலம், இந்திய மாதர் தேசிய சம்மேளத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.செல்வராணி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் தக்கலை எஸ். ராஜு, மஞ்சாலுமூடு மரியதாஸ், புத்தேரி பிரேமா கிருஷ்ணன், ஆரல் வி.அருள்குமார், அனைந்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் எஸ்.சஜேஷ், பூதை கிளை செயலாளர் தா.மகேஷ் பழங்குடி மக்கள் சங்க பிரதிநிதியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட உறுப்பினரான சுகுமாரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-
குமரி மாவட்டத்தில் மழை காலங்களில் அனைத்து கால்வாய்களும் தூர்வாரி கரைகள் பலப்படுத்தப்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்திட வேண்டும்.
ஒரு மழைக்கே தாக்குபிடிக்காத குமரிமாவட்ட புதிய சாலைகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னிபஸ்கள் கட்டண உயர்வை தடுத்து நிறுத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமரி முதல் சென்னை வரை அதிக ரயில்களை இயக்க தென்னக இரயில்வே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் போதை மீட்பு சிகிட்சை மையம் ஏற்படுத்த வேண்டும். போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.