நாகர்கோவில் அக் 28
சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற கலைஞரின் நூற்றாண்டு விழா பேச்சுப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்து கழகத் தலைவர் கரங்களில் இருந்து பரிசுகளைப் பெற்ற வெற்றியாளர்களுக்கு குமரி மாவட்ட இளைஞரணி சார்பில் இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சரவணன் மற்றும் இளைஞர் அணி அமைப்பாளர்கள் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு மாநில இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ” என் உயிரினும் மேலான” எனும் தலைப்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடித்த வெற்றியாளர்களுக்கு கழகத்தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பரிசளித்துப் பாராட்டினார். 17,000 பேர் பங்கேற்ற இப்போட்டியில் முதல் இடம் பிடித்த நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மோகநிதிக்கு முதல் பரிசாக ரூ.3 லட்சமும், 2-ஆம் இடத்தைப் பிடித்த செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ம.சிவரஞ்சனிக்கு ரூ.2 லட்சமும், 3-ஆம் இடத்தைப் பிடித்த தஞ்சை மாவட்டத்தின் வியாணி விஸ்வாவுக்கு ரூ.1 லட்சமும் நம் முதலமைச்சரால் வழங்கப்பட்டது.
இறுதிப்போட்டியின் வாயிலாக இளைஞரணி சார்பில் கண்டெடுத்து கழகத்தின் வசம் ஒப்படைக்கப்பட்ட 182 போட்டியாளர்கள் இனி திராவிட இயக்கக் கொள்கைகளை தமிழ்நாடெங்கும் முழங்க உள்ளனர்.
வெற்றி பெற்றவர்கள் – இறுதிப் போட்டி வரை வந்தவர்கள் உட்பட தன்னம்பிக்கையுடன் பங்கேற்ற அத்தனை இளைஞர்களுக்கும் அடையாளம் காணும் பணியை மேற்கொண்ட நடுவர்கள், பேச்சுப் போட்டியை நடத்த துணை நின்ற தலைமைக் கழக – மாவட்டக்கழகச் செயலாளர்களுக்கும் கலைஞர்100 பேச்சுப் போட்டியை சிறப்புற ஒருங்கிணைத்த இளைஞரணி மாநிலத் துணைச் செயலாளர்கள்- மாவட்ட அமைப்பாளர்கள் -துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் குமரி மாவட்ட கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் இராஜாக்கமங்கலம் ஒன்றிய பெருந் துணைத் தலைவர் வழக்கறிஞர் சரவணன் தன்னுடைய பாராட்டை தெரிவித்துக் கொண்டார்.இந்நிகழ்வில் இளைஞர் அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டார்.