நாகர்கோவில் அக் 28
கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் லீபுரம் ஊராட்சி – ஆரோக்கியபுரத்தில் ரூ. 15 இலட்சத்தில் புதிய நியாய விலைக்கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்கான பணிக்கு கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு லீபுரம் ஊராட்சி தலைவர் ஜெயகுமாரி லீன் தலைமை வகித்தார். ஆரோக்கியபுரம் பங்குத்தந்தை கிங்ஸ்லி சஜு முன்னிலை வகித்தார். தளவாய்சுந்தரம் எம் எல் ஏ இப்பணிக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பங்கு பேரவை துணைத் தலைவர் அமல்ராஜ், மீன் வளர்ச்சி கழக செயலாளர் ருக்மணி, அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கழக செயலாளர்கள் ஜெஸீம், தாமரை தினேஷ், சாமிதோப்பு பார்த்தசாரதி, லீபுரம் ஊராட்சி துணைத் தலைவர் மணிகண்டன், வார்டு உறுப்பினர்கள் சக்திவேல், லெட்சுமிபாய், கிளைச் செயலாளர்கள் அன்னமணி, மாணிக்க வாசகம், தங்கராஜ், செல்லப்பன் மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.