மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி என் பாரத் தன்னார்வத்துடன் தீபாவளி என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளில் சேவை செய்ய அறிவுறுத்தியுள்ளது. அதன்படி திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் அலகு-2 மாணவர்கள் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேவையாற்றினார்கள். முன்னதாக அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். செவிலியர் கண்காணிப்பாளர் முருகாம்பாள், செவிலியர்கள் விஜய், அமிர்த
லட்சுமி ஆகியோர் மாணவர்களை, குழந்தைகள் புறநோயாளிகள் பிரிவு, விபத்து மற்றும் தீவிர அவசர சிகிச்சைப் பிரிவு, பொது புற நோயாளிகள் பிரிவு என்று மூன்று பிரிவுகளாக பிரித்து, மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருபவர்களுக்கு நோயின் தன்மையை அறிந்து அதற்குண்டான பகுதிக்கு செல்லவேண்டும். என கனிவுடன் வழுகாட்டினார்கள். மேலும் புற நோயாளிகள் பதிவு செய்ய உதவி புரிந்தனர். மாணவ செயலர்கள் மது கார்த்திக், கிருஷ்ணமூர்த்தி, செர்லின் ஆகியோர் தலைமையில் மாணவ மாணவிகள் சேவையாற்றினார்கள்.
நிகழ்விற்கான ஏற்பாட்டினை மருத்துவக்கல்லூரி டீன் முருகேசன், அரசு கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தனர்.