ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவில், அருள்மிகு கலசலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 23வது பட்டமளிப்பு விழா, கலசலிங்கம் கல்விக் குழுமங்களின் தலைவர் முனைவர். க. ஸ்ரீதரன், தலைமையில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர். எஸ். கோபாலகிருஷ்ணன், வரவேற்று ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார்.
2020-2023ல் பயின்ற பி.ஏ., பி.எஸ்.சி., பி.சி.ஏ., பி.காம்., எம்.காம்., எம்.எஸ்.சி., மாணவர்கள் 498 பேருக்கு பட்டங்களையும், பல்கலை தரவரிசையில் இடம்பெற்ற 21 பேருக்கு தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
மேலும், கல்லூரியின் செயலாளர் டாக்டர். எஸ். அறிவழகி, துணைத்தலைவர் எஸ். சசி ஆனந்த், வாழ்த்துரை வழங்கினார்.
”உலக மாற்றத்திற்கேற்ப மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ளவேண்டும்”, மேலும் தொடர்ந்து தங்கள் துறையிலும், வேலையிலும் வளர்ந்து வரும் முன்னேற்றத்தை அறிந்து கொண்டு அதனைப் பயன்படுத்துவது, தங்கள் படிக்கின்ற கல்லூரிக்கும், பெற்றோருக்கும், மக்களுக்கும் இயன்ற அளவு உதவி புரிவதும் மாணவர்களின் முக்கிய கடமைகள் என்று அறிவுரை வழங்கினார் துணைத்தலைவர்.
விழா ஏற்பாடுகளை துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.