கன்னியாகுமரி அக் 25
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற பட்டாசு விற்பனையாளர்களுடனான பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த கலந்து ஆய்வு கூட்டத்தில் உரிமம் இல்லாத பட்டாசுகளை விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தீயணைப்பு அதிகாரி.சத்யகுமார் தெரிவித்தார். மேலும் பட்டாசு கடையில் இரண்டு பக்கங்களிலும் வெளியே செல்ல வாயில்கள் இருக்க வேண்டும், அவ்வாறு இருக்கும் வாயில்கள் விற்பனை நடக்கும் போது அவசரமாக வெளியேறும் வகையில் திறந்திருக்க வேண்டும். பட்டாசு கடையில் எளிதில் தீ பற்ற கூடிய மின்கலன்களை பயன்படுத்தக் கூடாது. அதிக உஷ்ணம் தரும் மின்விளக்குகளை பயன்படுத்தக் கூடாது, உரிமம் இல்லாமல் தயாரிக்கப்படும் பட்டாசுகளை விற்பது குற்றமாகும் எனவும் உரிமம் பெறப்பட்ட இடத்தில் மட்டுமே பட்டாசு சேமித்து வைத்து விற்பனை செய்ய வேண்டும் இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். இதில் நூற்றுக்கு மேற்பட்ட பட்டாசு கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.