கன்னியாகுமரி அக் 25
களியக்காவிளை அருகே உள்ள வாறுதட்டு எம்.எம்.கே.எம்.உயர்நிலைப்பள்ளி மாணவிகள் தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் நடைபெற்ற 14 – வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான கன்னியாகுமரி மண்டல அளவிலான கோ – கோ போட்டியில் இரண்டாம் பரிசை வென்றனர். வாறுதட்டு பள்ளி மாணவிகள், R.ரேஷ்மா, அனுஷ்கா, ஆஸ்மி, அபிஷிகா, அன்சிகா, ரெபிஷா, அஜேஷியா, சிஸ்மா மேக்லின், பெர்சியா, காவ்யா, சிபிஷா ராஜ், ரீஜா ஆகிய மாணவிகளைக கொண்ட குழுவினர் 14 – வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான மண்டல அளவிலான கோ – கோ போட்டியில் இரண்டாம் பரிசை வென்று புதிய சகாப்தத்தை படைத்துள்ளனர்..
மண்டல அளவிலான கோ – கோ போட்டியில் இரண்டாம் பரிசு வென்ற வாறுதட்டு பள்ளி மாணவிகளை பள்ளியின் தாளாளர் ஜஸ்டின் சுதீஷ்,பள்ளியின் தல நிர்வாகி ஜோசப் சந்தோஷ், வாறுதட்டு புனித சவேரியார் ஆலய உதவிப் பங்குத் தந்தை லிண்டோ, தலைமையாசிரியர் ரமேஷ், உடற்கல்வி ஆசிரியர் என்.எம்.பிரேம்ராஜ் , ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் ஆகியோர் பாராட்டினர்.