அரியலூர், அக்;24
அரியலூர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப்பொறியாளர் வடிவேல் உத்திரவின்படி ,செந்துறை உட்கோட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது.அதன்படி செந்துறை உட்கோட்ட பொறியாளர்கள் முன்னிலை சாலை புருவங்கள் சமப்படுத்தி மழைநீர் தேங்காதவாறு சரி செய்யும் பணிகள் மற்றும் முள் செடிகள் அப்புறப்படுத்தும் பணி,மற்றும் மழைக்காலங்களில் கல்வெட்டுகளில் மழைநீர் தேங்கா வண்ணம் நீர் வழிப்பாதையை சுத்தம் செய்யும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்