நாகர்கோவில் அக் 24
குமரி மாவட்டம் அழகிய பாண்டியபுரம் பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் மளிகை கடைகள் உட்பட 15 கடைகளில் மாவட்ட ஆட்சியர் உத்தரவு மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர்.செந்தில்குமார் அறிவுரையின்படி அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் க.சக்திமுருகன் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் சதீஸ் நந்தகுமார் ஆகியோர் புகையிலை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது அனைத்து கடைகளுக்கும் புகையிலை விழிப்புணர்வு குறித்த விளம்பர பதாகைகள் வழங்கப்பட்டது. ஆய்வில் அனுமதி மறுக்கப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் 15 கிலோ பறிமுதல் செய்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் ஒப்படைக்ப்பட்டது. மேலும் மனித உணவக பயன்பாட்டிற்கு வைத்திருந்த செயற்கை நிறமிகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
சுகாதாரமற்ற முறையில் இயங்கும் உணவகங்கள் மற்றும் அனுமதி மறுக்கப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு போன்ற விதிமுறைகள் மீறல்கள் குறித்து இரண்டு உணவகங்களுக்கு 6000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.மேலும் உணவகங்களில் ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெயின் மறுசுழற்சி பயன்பாடுகள் (பயோடீசல்) குறித்த விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.