நாகர்கோவில் அக் 24
குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட இரவிபுதூர் மேலத் தெருவை சேர்ந்த திருமலை பிள்ளை என்பவரது மகன் அழகப்பன் (வயது-56) என்பவர் ஆவார். ஏழையான இவர் புகைப்பட நிபுணராகவும் உள்ளார். இவர் விபத்தில் சிக்கியதன் காரணமாக மாற்றுத் திறனாளியாக உள்ளார். இவர் பணிக்கு செல்வதற்கு ஏதுவாக மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனம் வேண்டி தளவாய்சுந்தரம் எம் எம் எல் ஏ விடம் கோரிக்கை மனு கொடுத்திருந்தார். இக்கோரிக்கையினை ஏற்று 2023-2024-ம் ஆண்டிற்கான கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனம் வழங்க ரூ. 1 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.
இதனடிப்படையில் நேற்று தோவாளையில் உள்ள கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரின் முகாம் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளி அழகப்பனுக்கு ரூ. 1 இலட்சம் மதிப்பிலான மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தளவாய்சுந்தரம் மாற்றுத் திறனாளி அழகப்பனுக்கு மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனத்தை வழங்கினார்.
வாகனத்தை பெற்றுக் கொண்ட இரவிபுதூர் ஏழை மாற்றுத் திறனாளி அவரது குடும்பத்தார் தளவாய்சுந்தரத்திற்கு நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் முடநீக்கியல் வல்லுநர் மரிய ஜெகன், கிழக்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் சுகுமாரன், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெஸீம், தோவாளை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் முத்துக்குமார், தோவாளை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சாந்தினிபகவதியப்பன், மருங்கூர் பேரூராட்சி தலைவர் லெட்சுமி சீனிவாசன், அஞ்சுகிராமம் பேரூர் கழகச் செயலாளர் ராஜபாண்டி, மருங்கூர் பேரூர் கழகச் செயலாளர் சீனிவாசன், சுசீந்திரம் பேரூர் கழகச் செயலாளர் குமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் லெட்சுமிநாராயணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் குமரகுரு, இரவிபுதூர் ஊராட்சி பொறுப்பாளர் செல்லம்பிள்ளை, லீபுரம் ஊராட்சி பொறுப்பாளர் லீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.