நாகர்கோவில் அக் -22,
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை. முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 400க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் இன்று பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் இலவச தேய்ப்பு பெட்டி வழங்கும் திட்டத்தின் கீழ் 16 பயனாளிகளுக்கு தலா ரூ.6552 என மொத்தம் ரூ.1.05 மதிப்பில் தேய்ப்பு பெட்டிகளும், மின் மோட்டருடன் கூடிய இலவச தையல் இயந்திரம் 20 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், தனித்துணை ஆட்சியர் சேக் அப்துல் காதர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கனகராஜ், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.