அரியலூர்,அக்;22
அரியலூர் மாவட்டம் அரியலூர் டவுன் மேலத்தெருவில் அமைந்துள்ள அருள்மிகு பெரியநாயகி அம்மன் கோவிலை ஒட்டி குறிஞ்சான் ஏரி மற்றும் அரசநிலை ஏரி உள்ளது. இந்த இரண்டு ஏரிகளின் நடுவில் ஒரு சாலை செல்கிறது, இந்த சாலை நொச்சிக்குளம், பேரையூர் மற்றும் ஆலத்தூர் போன்ற ஊர்களையும், புறநகர் போக்குவரத்து சாலையினையும் இணைக்கிறது. மேலும் தெற்கு பகுதியில் குறிஞ்சான் ஏரியினை ஒட்டி அருள்மிகு காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு, கிருத்திகை மாத பௌர்ணமி வழிபாடு, மாத
அமாவாசை வழிபாடு, ஐப்பசி அண்ணாபிஷேகம் வழிபாடு, மாத சிவராத்திரி வழிபாடு போன்ற பக்தி நிகழ்ச்சிகள் இக்கோவிலில் ஊர் பொதுமக்களால் பக்தர்கள் கலந்துகொண்டு மற்றும்
சிவபக்தர்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதே பகுதியில் வடக்கு திசையில் அமைந்துள்ள அரசன் நிலையிட்ட விநாயகர் திருக்கோவில் எழுந்தருளி உள்ளது. இந்த கோவிலிலும் அதேபோன்று வழிபாடுகள் பக்தர்களால் தினந்தோறும் திரளான பக்தர்களுடன் வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மேலும் இந்த பகுதியின் சாலையின் வழியாக பெரம்பலூர் மாவட்டம், நொச்சிக்குளம், பேரையூர் மற்றும் ஆலத்தூர் போன்ற ஊர்களுக்கு இது மெயின் இணைப்பு சாலையாகவும் உள்ளது. ஆகவே மாவட்ட ஆட்சித் தலைவர் கவனத்தில் கொண்டு மேலே குறிப்பிட்ட ஆலயங்கள் வழியாக செல்லக்கூடிய இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் அரியலூர் மேலத்தெரு பொதுமக்கள் கோரிக்கை.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்