சென்னை, அக்டோபர் – 22, பார்ட்ஷியன் கலை, அறிவியல் கல்லூரி வணிகவியல் மற்றும் மேலாண்மை துறை சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்க நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் சிறப்பு அழைப்பாளராக கொண்டார்.
மேலும் பார்டீசியன் கல்லூரி சார்பாக சென்னை பள்ளி மாணவர்களிடையே நடந்த பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற வர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
கல்லூரியின் இயக்குனர், செயலர் நவீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இயக்குனர் பாத்திமா வசந்த், கல்லூரி முதல்வர் ஆரோக்கியமேரி கீதா, துணை முதல்வர்கள் ஆனந்த பிரியா, ஸ்வீட்டி ரெஜினா மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் மெய்யநாதன் மாணவர்களிடேயே உரையாற்றியதாவது:-
பார்டீசியன் கல்லூரி மாணவர்களுக்கு ஆளுமை திறனை மேம்படுத்துவதில் முன்னிலை வகிக்கின்றது .
கல்வி மட்டுமல்லாது உடல் நலன் சார்ந்த ஆளுமைகளை உருவாக்குவதிலும் முக்கியத்துவம் அளிக்கிறது.
மாணவர்கள் எப்போதும் நேர்மறை சிந்தனையுடன் செயல்பட வேண்டும். இதை நம் முன்னோர்கள் கற்பித்து சென்றிருக்கிறார்கள். வெற்றி பெறும்போது கொண்டாடுவதை விட அமைதியாய் ஏற்றுக் கொள்ள வேண்டும் .அதேபோல் தோல்வி என்று வரும்போது கவலை பட கூடாத மன பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
வெற்றி தோல்வி என்பது வாழ்க்கையின் ஒரு அங்கம் என்பதை எப்போதும் மாணவர்கள் நினைவில் கொள்ள வேண்டும் . அறிவுத்திறனும் ஆளுமைத் திறனும் வளர வேண்டும் என்றால் பல்வேறு பழமை வாய்ந்த இலக்கியங்கள் நவீனஇலக்கியங்கள் என தேடி மாணவர்கள் படிக்க வேண்டும். நல்ல நூல்களைப் படிக்க படிக்க அறிவும் நல்லெண்ணங்களும் நேர்மறை சிந்தனைகளும் வளரும் . இதற்கெல்லாம் மூலாதாரமாக விளங்குவது கல்வியே ஆகும். இந்தியாவிலேயே தமிழ்நாடு உயர்கல்வி பயில்வதில் முன்னிலை வைக்கிறது . கலை அறிவியல், பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் அதிகமாக உள்ள மாநிலம் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது. இதற்கெல்லாம் காரணமாக விளங்கியது நம் முன்னோடிகளின் ஆளுமைத் திறனே. ஆகவே எத்துறையானாலும் அதில் மாணவர்கள் ஆளுமைத் திறனை வளர்த்து கொள்ள வேண்டும் என்றார்.