ஈரோடு அக் 22
அமைச்சர் நசியனூர் பேரூராட்சியில் பனையம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் 4 வகுப்பறை கட்டடங்கள் மற்றும் 1 ஆய்வகக் கட்டிடம் கட்டும் பணிக்கும், சுஜில்கரை அரசு உயர்நிலைப்பள்ளிக்கு நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் ரூ.1.87 கோடி மதிப்பீட்டில் 6 வகுப்பறைக் கட்டிடம் மற்றும் ஒரு ஆய்வகக் கட்டடம் கட்டும் பணிக்கும், வணிக வரித்துறையின் சார்பில் பவானியில் ரூ.2.35 கோடி மதிப்பீட்டில் புதிய வணிக வரி அலுவலக கட்டிடம் கட்டும் பணிக்கும், நசியனூர் பேரூராட்சியில் ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் அலுவலக கட்டிடம் கட்டும் பணிக்கும் என மொத்தம் ரூ.6.59 கோடி மதிப்பீட்டில் 4 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, பெரியவிளாமலையில் ரூ.28 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட
ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தினை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சதீஷ் ஈரோடு ஊராட்சி ஒன்றிய தலைவர் பிரகாஷ், உதவி இயக்குநர்கள் கணேசன் (பேரூராட்சி), திரு.உமாசங்கர் (ஊராட்சிகள்), நசியனூர் பேரூராட்சி தலைவர் மோகனப்பிரியா லோகேஸ்வரன், செயல் அலுவலர் கோவிந்தராஜா, பெரியவிளாமலை ஊராட்சி மன்றத்தலைவர் பூவிழி உட்பட பலர் கலந்து கொண்டனர்.