முதுகுளத்தூர். அக் 21
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய கழக செயல்வீரர்கள் ஆலோசனை மற்றும் 53-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் யாதவர் திருமண மஹாலில் ஒன்றியச் செயலாளரும் வெங்களகுறிச்சி ஊராட்சி மன்றத் தலைவருமான எஸ்.டி.செந்தில் குமார். தலைமையில் ஒன்றிய செயலாளர்கள் கடலாடி முனியசாமிபாண்டியன் எஸ்.பி.
காளிமுத்துராஜேந்திரன், கருமலையான் ஆகியோர். முன்னிலையில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து
கர்ணன் அனைவரையும் வரவேற்றார்.
மாவட்டச் செயலாளர் மற்றும் எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் வக்கீல் எம்.சுந்தரபாண்டியன். முன்னாள் எம்எல்ஏ மலேசியா எஸ்.பாண்டியன்” முன்னாள் எம்.பி.நிறைகுளத்தான், முன்னாள் MLA சதன் பிரபாகர், பங்கேற்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகி ராஜன் செல்லப்பா. எம்எல்ஏ பேசியதாவது போராட்டத்தில் வளர்ந்த இயக்கம் தான் அதிமுக. எத்தனையோ தொண்டர்களை இழந்து வளர்ந்துள்ளது. திமுக மீது மக்கள் வெறுப்பாக உள்ளனர். திமுக ஆட்சி எப்போதும் தொடர்ந்து 2 வது முறையாக ஆட்சிக்கு வந்த வரலாறு இல்லை அதிமுக ஆட்சிதான் எடப்பாடி தலைமையில் 2026-ல் அமையும் அப்போது திமுக அரசால் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும் இவ்வாறு பேசினார்.
அதன் பின்னர் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசியதாவது ‘அதிமுக கிளை கழக செயலாளர்கள் பாடுபட்டால் அதிமுக அரசு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமையும் இளைஞர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும் திமுக பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து விட்டன.’2026-ல் அதிமுக ஆட்சி அமைய தொண்டர்கள் கிளை கழக செயலாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று பேசினார். இந்த விழாவில் விளங்குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்துவேல்,
நகர் அவை தலைவர் கருப்பசாமி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர்
ஏஎம்ஜி. கண்ணன், ஆகியோர் உள்பட கட்சி தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.