சுசீந்திரம்.அக்.20
குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள பறக்கை வணிகர் தெருவை சார்ந்தவர் முத்து இவரது மனைவி சுமதி கடந்த 14ஆம் தேதி மதியம் தனது வீட்டில் சமையல் செய்து கொண்டிருக்கும் பொழுது சமையல் கேஸ் கசிந்து உள்ளது.
உடனடியாக முத்துவும் அவரது மனைவி சுமதியும் வீட்டு அருகே உள்ள சீதாராமன் 40 மற்றும் பிரேமா 50ஆகியோரிடம் போய் கூறிஉள்ளனர் இதனை சரி செய்வதற்காக சீதாராமனும் பிரேமாவும் வீட்டிற்கு வந்துள்ளனர் வீட்டிற்கு வந்து சமையல் கேஸ் கசிவதை சரி செய்து கொண்டிருக்கும் பொழுது திடீரென தீப்பிடித்து அங்கே நின்று இருந்தசீத்தாராமன் 40 முத்து 49 அவரது மனைவி சுமதி 48 அருகே நின்ற பிரேமா 50 ஆகியோர் மீது தீப் பிடித்து எறிந்தது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சீத்தாராமன் பரிதமாக நேற்று முன் தினம் இரவு உயிரிழந்தார் இதுகுறித்து சீத்தாராமனின் மனைவி தீபா 38 சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.