சாதனை மாணவர்களுக்கு ராஜசேகரன் நினைவு கல்வி பரிசு வழங்கப்பட்டது
ராமநாதபுரம், அக்.21-
ரெகுநாதபுரம் ஶ்ரீவல்லபை ஐயப்பன் ஆலயத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு புத்தாடைகள் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு
கண்ணபிரான் தலைமை வகித்தார் . முருகன் வரவேற்புரை ஆற்றினார். அறக்கட்டளையின் சேவைகள் பற்றி உறுப்பினர்கள் சிறப்புரையாற்றினார்கள். அறக்கட்டளையின் செயல்பாடுகள் பற்றி குருநாதர் ஶ்ரீ மோகன் விளக்க உரையாற்றினார்கள். இராமநாதபுரம் ஶ்ரீ இராமலிங்கா அன்பு இல்ல நிர்வாகி ஏற்புரை ஆற்றினார். 10,12-ஆம் வகுப்புகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு ராஜசேகரன் நினைவு கல்விப் பரிசும், பாராட்டு சான்றிதழ் மற்றும் ரொக்கப் பணமும் வழங்கப்பட்டது. பின்னர் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது. சிறப்பு பூஜை முடிந்த பிறகு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.