வேலூர்=20
வேலூர் மாவட்டம், ஸ்ரீ அன்னபூரணி நித்திய அன்னதான அறக்கட்டளை முதலாம் ஆண்டு நிறைவு விழா வேலூர் சத்துவாச்சாரி சாவடி வீதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்கள் இரத்தினகிரி ஸ்ரீ தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிகள், மற்றும் கலவை ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் தவத்திரு ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை துவக்கி வைத்தனர் இதில் கோ பூஜை, மஹா கணபதி ஹோமம், மஹாதீப ஆராதனை வஸ்திர தானம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அறக்கட்டளை அறங்காவலர் செல்வராஜ், செயலாளர் பார்த்தசாரதி ,பொருளாளர் மோகன், மற்றும் சத்துவாச்சாரி நகர பொதுமக்கள், ஸ்ரீ அன்னபூரணி நித்திய அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள், பலர் கலந்து கொண்டனர்.