கோத்தகிரி அருகே அரவேனு பகுதியில் உள்ள ஆல்ஃபா ஜிகே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் குறித்த கருத்தரங்கு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அரவேனு பகுதியில் உள்ள ஆல்ஃபா ஜிகே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின்
முதல்வர் அமுதா விஸ்வநாதன். தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் கேஜே. ராஜு. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது. கருத்துக்களாவன –
தற்போது உலகெங்கும் மிகப் பரவலாக விவாதிக்கப்படுகிற பொருள் புவி வெப்பமும் காலநிலை மாற்றமும் என்பதாகும் கடந்த 150 ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை 1.41 டிகிரி வரை உயர்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
எதிர் வரும் 2028 ஆண்டுக்குள் பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரியை தாண்டும் என்ன அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அப்பொழுது காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை முழுமையாக நம்மால் உணர முடியும். புவி வெப்பத்திற்கு காரணமான கார்பன்-டை-ஆக்சைடு மீத்தேன் போன்றவற்றின் அளவு பூமியின் திறனை விட மிக அதிக அளவில் உள்ளதாக இருக்கும் என்று
என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
வருகை புரிந்த அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.