கன்னியாகுமரி அக் 19
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை ஏ ஆர் எஸ் நியாய விலை கடையில் அருமனை கண்ணன்,பள்ளிவிளை பகுதியை சார்ந்த மணி மகன் சுபின் அரிசி வாங்கும் போது 18 கிலோவுக்கு பதிலாக 12 கிலோ அரிசி மட்டுமே வழங்கியிருக்கிறார். வீட்டில் சென்று பார்க்கும் போது அவர் அம்மா அரிசி குறைவாக இருக்கிறது என்று கூறியதால் சுதாரித்துக் கொண்ட சுபின் திரும்பி நியாய விலை கடைக்கு வந்து திராசில் வைத்து தூக்கும் போது 12 கிலோ அரிசி மட்டுமே இருந்தது. இதுகுறித்து முறையிட்ட போது குறைவாக இருந்த ஆறு கிலோ அரிசியை கொடுத்துள்ளனர்.
அதன் பின் முருகானந்தம் விற்பனையாளர் குடும்ப அட்டையை தாருங்கள் பரிசோதித்து பார்க்கிறேன் என்று பெற்றுக்கொண்டு திருப்பி கொடுக்கவில்லை குடும்ப அட்டையை கேட்கும்போது அது காணவில்லை தேடித் தருகிறேன் என்று கூறியதால் அதிர்ச்சி அடைந்தார் சுபின்.
ஏற்கனவே அரிசி குறைவாக கொடுத்ததால் கடுப்பில் இருந்த சுபின் எனக்கு எழுதி தாருங்கள் என்று கேட்டுள்ளார் விற்பனையாளரும் நான் குறைவாக அரிசி கொடுத்துள்ளேன் என்பதை எழுதிக் கொடுத்துள்ளார். சம்பவம் அப்பகுதி மக்களிடம் காட்டுத் தீ போன்று பரவியதை தொடர்ந்து எங்களுக்கும் இவர் குறைவாக தான் அரிசி கொடுத்துக் கொண்டிருக்கிறார். இவரை சும்மா விட்டுவிட முடியாது என்று கடையின் முன் அமர்ந்து உள்ளனர். மேலும் நியாய விலை கடைக்காரரால் எடுத்து வைக்கப்பட்டுள்ள தனது
குடும்ப அட்டையை தந்த பின்பு தான் வீட்டிற்கு போவோம் என்று கடையின் முன் அமர்ந்துள்ளனர்.
பிரச்சனையின் வீரிய தன்மையை உணர்ந்து கொண்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.