தென்தாமரைகும்,அக்.19-
குமரி மாவட்டம் தென்தாமரைகுளம் பேரூராட்சி 15-வது வார்டு பாஜக கவுன்சிலர் சுபாஷ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது ;
தென்தாமரைகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட இலந்தையடிவிளை அருகில் தலக்குளம் உள்ளது.இக்குளத்தில் கரையோரம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.
இக்குளத்தில் அருகில் தனியார் தண்ணீர் சப்ளை செய்யும் நிறுவனம் தங்களுக்கு சொந்தமான இடத்தில் போர்வெல் அமைந்துள்ளது தண்ணீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர்.
இவ்வாறு தொழில் செய்து வரும் தனியார் நிறுவனம் தங்களுக்கு சொந்தமான டேங்கர் லாரிகளை அவர்களது இடத்தில் நிறுத்தாமல் குளத்தின் கரையோரம் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தி தண்ணீர் பிடித்து செல்கின்றனர் .
டேங்கர் லாரியில் தண்ணீர் பிடிக்கும்போது தண்ணீர் வெளியே வருவதால்,சாலையோரம் சகதி ஏற்படுகிறது.இந்த சகதியால் சாலையில் சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
சாலையில் இரண்டு வாகனங்கள் ஒரே நேரத்தில் கடந்த செல்லும் போது அந்த வழியாக டூ வீலரில் செல்லும் வாகன ஓட்டிகளின் மீது சக்திகள் படுகிறது.அவ்வப்போது விபத்துகளும் நடக்கிறது.
அதேபோல் அந்த பகுதியில் ஒரு வீடும் உள்ளது.இந்த வீட்டில் வசிப்பவர்கள் சாலையில் ஓடைபோல் தேங்கி கிடக்கும் சகதியை கடந்து வீட்டை விட்டு வெளியே வரவும்,வீட்டிற்குள் செல்லவும் தினந்தோறும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேசிய நெடுஞ்சாலையை சேதபடுத்தியும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூராகவும் செயல்பட்டு வரும் தனியார் தண்ணீர் சப்பை நிறுவனம் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.