நாகர்கோவில் அக் 19
கன்ஸ்யூமர் வாய்ஸ் ஆப் கன்னியாகுமரி நுகர் வோர் அமைப்பு மற்றும் குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மற்றும் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் உலக உணவு தின பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நாகர்கோவில் வருவாய் துறை அலுவலர் சங்க கட்டடத்தில் நடந்தது.
அப்போலோ சுரேஷ் தலைமை வகித்தார். டோமினிக்டன்ஸ்டன் வர வேற்றார்.சுப்பிரமணியன் பொருளாளர் ஜெயசிரில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார், உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் டாக்டர் சுப்புலட்சுமி, சட்ட ஆலோசகர் தமிழ்தேவனார் ஆகியோர் பேசினர்.
இதில் கலந்து கொண்ட வர்களின் சந்தேகங்களுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.டாக்டர் அரசு நன்றி கூறினார். நிகழ்ச் சியில் தக்கலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் பிரவின் ரகு ,மெல்க்கியாஸ் மற்றும் நாகர்கோவில் திருச்சிலுவை கல்லூரி,ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி,பயோனியர் குமாரசாமி கல்லூரி ,முட்டம் பிஷப் ஆன்ஜிஸ்சாமி கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.