வேலூர்=19
வேலூர் மாவட்டம், வேலூர் காட்பாடி காந்திநகர் அக்சிலியம் கல்லூரியில் 65 வது பட்டமளிப்பு விழா பள்ளி கலையரங்கில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினர் தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப குழும செயலர் பேரா. முனைவர் எஸ். வின்சென்ட் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் முனைவர் மேரி ஜோஸ்பின் ராணி கல்லூரி செயலர் முன்னிலை வகித்தார். முனைவர் ஆரோக்கிய ஜெயசீலி கல்லூரியின் முதல்வர் வரவேற்புரையாற்றினார். முனைவர் வின்சி .சே தேர்வாணையர் மற்றும் இயற்பியல் துறை தலைவர் முனைவர் அமலா வளர்மதி துணை முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டனர் சிறப்பு விருந்தினர் பேராசிரியர் முனைவர் வின்சென்ட் 887 இளங்கலை மாணவியர்கள் 273 முதுகலை மாணவியர்கள் என மொத்தம் 1150 மாணவியர்களுக்கு பட்டமளித்தார். உதவி பேராசிரியர் கணிதத்துறை முனைவர் சபர்மதி நன்றி உரையாற்றினார்.