சென்னை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் எம்பி இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
தமிழக அரசு வடகிழக்கு பருவ மழைக்காலங்களில் விவசாய நிலங்களை மழையின் பாதிப்பில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்
தற்போதைய சம்பா சாகுபடி சூழலில் மழைநீர் தேங்கி பயிர் சேதமடைய வாய்ப்புண்டு
இந்நிலையில் வடிகால் வசதிகள் முறையாக சரியாக மேற்கொள்ளப்பட்டு வடிகால்களை போர்க்கால அடிப்படையில் தூர்வாரி, மழைநீர் தேங்காமல் வடிவதற்கு ஏதுவாக தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.