சிஎம்எஸ் மண்டல மேலாளர் ராம்குமார் துவக்கி வைத்தார்
ராமநாதபுரம், அக்.19-
பச்சை மீளிணைப்பு திட்டம் (Green Recovery Intervention) – இரண்டாம் கட்டம் திருப்புல்லாணி வட்டம், பனையடியேந்தல் கிராமப் பஞ்சாயத்து, கோவிந்தன் கோவில் வளாகத்தில் 18.10.2024 ல் துவங்கியது.
இந்நிகழ்ச்சியில் CMS மதுரை மண்டல மேலாளர் ராம் குமார் துவக்கி வைத்தார். இராமநாதபுரம் ICAR Krishi Vigyan kendra துணை பேராசிரியர் முத்துராமு, திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய தலைவர் புல்லாணி, ஊராட்சி தலைவர் லதா வெள்ளி, கிராம நிர்வாக அலுவலர் த
சிவபலநாதன், சிறப்பு உதவி ஆய்வாளர் சுபாஷ் சீனிவாசன் அணித்தலைவர் ஆசைத் தம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் 1000 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த தாவரங்களைச் சுற்றுப்புற சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை வளர்ச்சி முயற்சியாக நடத்தப்பட்டது. நிகழ்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சுந்தராஜன் மற்றும் இராஜாராம் ஆகியோர் முன்னெடுத்து நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தினர்.