பாதுகாப்பு உபகரணங்களை தீயணைப்பு நிலைய அலுவலர் ஆய்வு.
நாகர்கோவில் – அக்- 18,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில்
வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளதை முன்னிட்டு மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்டு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து தயார் நிலையில் நாகர்கோவில் தீயணைப்பு நிலைய வீரர்கள் உள்ளனர்.மழையின் போது பேரிடர் பாதிப்புகள் ஏற்பட்டால் மீட்பு பணிகள் மேற்கொள்ள வசதியாக மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இயந்திர வாள், கயிறு உள்ளிட்ட அனைத்து வகையான உபகரணங்கள், தளவாடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பேரிடர் மீட்பு பணிகள் மேற்கொள்ள வசதியாக மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழையையொட்டி பேரிடர் பாதிப்பை எதிர்கொள்ள ரப்பர் படகுகள், எமர்ஜென்சி லைட், ஜெனரேட்டர், பெட்ரோல் மூலம் இயங்கும் 20க்கும் மேற்பட்ட மரம் அறுக்கும் எந்திரங்கள், உயிர் பாதுகாப்பு கவசங்கள், கயிறு போன்றவை உள்ளது. தீயணைப்பு வாகனங்கள், பெரிய தண்ணீர் லாரிகளையும் தயார் நிலையில் வைத்துள்ளனர் இவற்றை தீயணைப்பு நிறைய அலுவலர் சத்யகுமார் ஆய்வு செய்தார் இந்த நிகழ்வின் போது மாவட்ட உதவி அலுவலர் துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்