நாகர்கோவில் – அக்- 17,
கன்னியாகுமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட புத்தளம் பேரூராட்சியில் கடந்த மூன்று மாத காலமாக கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற வில்லை. நேற்று நடை பெற இருந்த கவுன்சிலர்கள் கூட்டத்திலிருந்து 13 உறுப்பினர்களும் வெளி நடப்பில் ஈடுபட்டு செயல் அலுவலரிடம் பேரூராட்சி தலைவி மீது புகார் அளித்தனர் . அந்த புகாரில் பேரூராட்சி தலைவிக்கு வேண்டப்பட்டவர்களுக்கு கமிஷன் தொகையினை பெற்றுக் கொண்டு பணி ஒப்பந்தம் அளிப்பதாகவும், மினிட் புத்தகத்தை பேரூராட்சி தலைவியே திருத்தி எழுதுவதாகவும், மேலும் எங்கள் பகுதிகளுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தராமல் இருப்பதாலும் நேற்று 15 உறுப்பினர்கள் கலந்து கொண்டு நடைபெற இருந்த மன்ற சாதாரண கூட்டத்திற்க்கு மூன்று பேர் மட்டுமே கூட்ட அறையில் அமர்ந்திருந்தனர் . மீதம் உள்ள 13 உறுப்பினர்களும் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்திருந்தனர். பேரூராட்சி மன்ற தலைவி மீது செயல் அலுவலரிடமும் மாவட்ட ஆட்சியரிடமும் நம்பிக்கையில்லா தீர்மாணம் கொண்டு வருவதற்க்கு மனு அளிக்க போவதாக கவுன்சிலர்கள் கூறினர்.