சங்கரன்கோவில். அக்.17.
தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் வைத்து சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 225 வது நினைவு தின நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட அவை தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீ குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் யூஎஸ்டி சீனிவாசன், மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் செண்பகவிநாயகம், மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, மாவட்ட பொருளாளர் சரவணன் ,பொதுக்குழு உறுப்பினர்கள் தேவதாஸ் ,மகேஸ்வரி ஒன்றிய செயலாளர்கள் லாலாசங்கரபாண்டியன், கடற்கரை ,பூசைப்பாண்டியன், பெரியதுரை, சேர்மத்துரை ,கிறிஸ்டோபர் ,பால்ராஜ், ராமச்சந்திரன் ,வெள்ளத்துரை, குணசேகரன், நகர செயலாளர்கள் சங்கரன்கோவில் பிரகாஷ், புளியங்குடி அந்தோணிசாமி, பேரூர் கழகச் செயலாளர் மாரிமுத்து, நகர துணை செயலாளர் சுப்புத்தாய், சார்பு அணி நிர்வாகிகள் பொறியாளர் அணி பசுபதிபாண்டியன், சங்கர், தொண்டரணி அப்பாஸ், தகவல் தொழில் நுட்ப அணி சங்கர்ராஜ்,விவசாய தொண்டரணி கலைச்செல்வன், இளைஞர் அணி ராஜராஜன், ராஜ், அன்சாரி, ராயல்கார்த்தி ,மற்றும் மாரிக்குட்டி, வீரமணி, செல்வராஜ் , ஆர்.தலைவர், ராஜேந்திரன், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.