செந்துறை தாசில்தார் நேரில் ஆறுதல்
அரியலூர்,அக்;17
அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த இலங்கைச்சேரி கிராமத்தை சேர்ந்த மக்கள் அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே, 100 நாள் வேலை நேற்று பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது, அங்குள்ள ஒரு புளியமரத்தில் இருந்த மலைத் தேனீக்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்த மக்களை துரத்தி கொட்டியுள்ளது. இதில், நல்லதம்பி மகன் மகேந்திரன்(25), கருப்புசாமி மனைவி சுசிலா(50), மணிகண்டன் மனைவி வேம்பு(34), சிலம்பரசன் மனைவி கிருத்திகா(25) மற்றும் சிலம்பரசன் குழந்தை தேனரசன்(ஒரு வயது) உட்பட 10 பேர் மயக்கம் அடைந்தனர். இதையடுத்து அனைவரும் செந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர், அவர்களை செந்துறை தாசில்தார் வேலுமணி மற்றும் செந்துறை முதல் நிலை ஊராட்சி செயலர் ரவி , செந்துறை கிராம நிர்வாக அலுவலர், செந்துறை கிராம உதவியாளர் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர். பின்னர் அனைவரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்