பருவமழை தாக்கத்தை எதிர்கொள்ள. பல பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்தார்.
மேலும் தமிழக முதல்வர் உத்தரவின்படி நீலகிரி மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சர் நியமிக்கப்பட்டு அமைச்சரின் வழிகாட்டலின் படி எல்லா பகுதிகளிலும் மழை பாதிப்பு தடுப்புப் பணிகள் தீவிர படுத்த நடவடிக்கை எடுக்க பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு அபாயகரமான பகுதிகள் 283 என கண்டறியப்பட்டு அந்த பகுதிகளில் 436 முகாம்கள் சுமார் தயார் நிலைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து தெரிந்து கொள்ள வருவாய் துறை மருத்துவம் தீயணைப்புத்துறை ஆகியவை தயார் நிலையில் உள்ளது மாவட்டத்தில் 42 மண்டல குழுக்கள் இரவு பகலாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களும் தன்னார்வலர் குழுக்களும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவும் முன்னெச்சரிக்கையாக இருக்கவும்
பள்ளி மாணவ மாணவியர் பாதுகாப்பாக இருக்கவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.