கன்னியாகுமரி போக்குவரத்துக் காவல்துறையின் வாகன சோதனையில் சிக்கிய ஓட்டுனர் உரிமம் இல்லாத வாகனங்கள் பறிமுதல்.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவுப்படி கன்னியாகுமரி காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார், மேற்பார்வையில் கன்னியாகுமரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரபு மற்றும் உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் ஆகியோர் ராஜாக்கமங்கலம் பகுதியில் ஓட்டுநர் உரிமம் இன்றியும், நம்பர் பலகை இல்லாமலும், தகுந்த ஆவணங்கள் இன்றியும் ஓட்டி வந்த 5 ஆட்டோ ,3 இருசக்கர வாகனம், 2 டெம்போ-களை பறிமுதல் செய்தனர்.அதன் பின் அபராதம் விதிக்கப்பட்டு ஓட்டுநர்களுக்கு தக்க அறிவுரை வழங்கப்பட்டது.