அருமனை, அக் – 16
குமரி மாவட்டம் அருமனை அருகே மேல்பாலை பகுதியை சேர்ந்தவர் பகிரதன் மகன் பகீர்ராஜ் (38) எல்லை பாதுகாப்பு படை வீரர். ராஜஸ்தான் மாநிலத்தில் பணிபுரிந்தார். இவர் 15 நாட்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். இங்கு குடும்பத்துடன் பொழுதை கழித்து விட்டு மீண்டும் பணிக்கு ரயிலில் புறப்பட்டார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் ரயில் நிலையத்தில் ரயில் நிலையிலிருந்து இறங்க முயன்ற போது தவறி விழுந்ததில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டு அதே இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் அவரது உடல் நேற்று (செவ்வாய்க்கிழமை) சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அரசு முறைப்படி அடக்கம் நடைபெற்றது.
பகீர்ராஜுக்கு சைனி ராணி என்ற மனைவியும் 10, மற்றும் 8 வயதுகளில் இரண்டு மகன்களும் உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.