வேலூர் மாவட்டம்
வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 கிலோ குட்கா பான் மசாலா பறிமுதல் இருவர் கைது பாகாயம் காவல்துறையினர் நடவடிக்கை.
வேலூர்=16
உறவினர் வீட்டில் குட்காவை பதிக்க வைத்த நபர் கைது
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன அல்லாபுரம் அம்பேத்கர் நகர் பகுதியில் இஃபான் என்பவரது வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக பாகாயம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் பாகாயம் காவல் துறையினர் விரைந்து சென்று சோதனை மேற்கொண்டதில் முகமது நெளஷாத் வீட்டில் பதுக்கி வைத்திருந்த குட்கா, பான் மசாலா உள்ளிட்ட சுமார் 18000 மதிப்பிலான 25 கிலோ எடை கொண்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதனை அடுத்து முகமது நெளஷாத் காவல் நிலையத்தில் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியில் உள்ள முகமது நெளஷாத் நண்பர் காதர் 44 என்பவர் தான் தனது வீட்டில் போதை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாகவும் இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறியுள்ளார்.
இதனை அடுத்து போதைப் பொருட்களை பதிக்க வைத்த காதலை கைது செய்த பாகாயம் காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் முகமது நெளஷாத், காதர் இரண்டு நபரையும் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்