இரண்டே வருடத்தில்
தரம் உயர்த்திய மருத்துவர். மதன்குமார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் 2020ம் ஆண்டு மருத்துவராக டாக்டர். மதன்குமார் பொறுப்பேற்றதில் இருந்து காலையில் 7 மனிக்கு சரியாக வந்துவிடுவார், வெளி நோயாளிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளை வைத்தியம் பார்க்க ஆரம்பித்து விடுவார் 1.3.2023 ல் தலைமை மருத்துவராக பதவி உயர்வு பெற்றார், அதிகாரியாக இல்லாமல் சக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தூய்மை செய்யும் பணியாளர்கள் இரவு காவலர்கள் உள் நோயாளிகள் உள்ளிட்ட அனைவரிடமும் அன்போடு பழக கூடியவர்.இவர் இரவு பகல் எந்த நேரத்தில் அழைத்தாலும் உடனே பணியில் இருக்கும் மருத்துவர்களிடம் தெரிவித்து வைத்தியம் பார்க்க கூடியவர். இவர் பொறுபேற்றதிலிருந்து ஏராளமான உள் நோயாளிகள் வருகின்றனர் இதற்கு முன் விபத்தில் காயப்பட்டவர்கள் மற்றும் பிரசவம், ஆபரேஷன், என்றால் உடனே தர்மபுரி கிருஷ்ணகிரிக்கு அனுப்பி வைக்கக்கூடிய நிலையில் இருந்தது, தற்போது உள் நோயாளிகளுக்கு இங்கேயே முடிந்த அளவில் வைத்தியம் பார்க்க ஆணையிடுவார், மேலும் பொறுப்பேற்ற பிறகு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு உலக தர சான்று பெற்றது N,Q,A,S இரத்த சுத்திகரிப்பு டயாலிஸிஸ் மருத்துவம் மூலம் ஒரு மாதத்திற்கு 15க்கும் மேற்பட்ட நோயாளிகள் பயன் பெற்று வருகின்றனர் இதைதொடர்ந்து தைராய்டு டெஸ்ட், டிஜிட்டல் எக்ஸ்ரே, படிப்பறிவு இல்லாத நோயாளிகள் வந்தால் மருந்து மாத்திரைகள் சாப்பிடும் முறை குறித்து தனியார் மருத்துவமனை போல் அரசு மருத்துவமனையில் காலை,மாலை, இரவு, எனக் குறிப்பிட்டு தனித்தனி மாத்திரைக்கென காக்கி கலர் கவர் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். ஒவ்வொரு தளத்திற்கும் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர்( RO) மிஷின் வசதி ஏற்படுத்தினார். மருத்துவமனையின் பாதுகாப்பு கருதி 44 CCTV கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன இவர் பொறுப்பு ஏற்கும் பொழுது ஒரு இ.சி.ஜி மெஷின் மட்டும் இருந்தது தற்போது ஐந்து இ.சி.ஜி மிஷின்கள் உள்ளன நோயாளிகள் படுக்கும் மெத்தைக்கு தினமும் சுத்தமான உரையை கட்டாயமாக மாற்ற வேண்டும் இரவில் குடிகாரன் கூடாரமாக இருந்த அரசு மருத்துவமனையின் வளாகத்தை இவருடைய தீவிர கண்காணிப்பு உள்நோயாளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தினார் பழைய நுழைவாயினில் ஆம்புலன்ஸ் வர வழி இல்லாமல் போக்குவரத்து நெரிச்சலால் சிரமம் ஏற்பட்டது, இதனால் நுழைவாயிலை திருப்பத்தூர் சாலையில் மாற்றி அமைத்ததால் ஆம்புலன்ஸ் இடையூறு இல்லாமல் உள்ளே வரவும் வெளியே செல்லவும் ஏற்படுத்தினார், இதனால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டது. நோயாளிகளின் அடிப்படை தேவைகளான குடிநீர் மின்சாரம் மின்விசிறி உணவு கழிப்பறை வசதி உள்ளிட்ட நோயாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து வந்த இவர் பணி மாறுதலாகி சென்று விட்டால் ஊத்தங்கரை சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்களின் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் மருத்துவமனையின் வளர்ச்சி கேள்விக்குறியாகிவிடும்.
என்பதால் பாப்பிரெட்டிப்பட்டிக்கு பணி மாறுதலுக்காக செல்லக்கூடிய மருத்துவர் மதன்குமாரை ஊத்தங்கரை வட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் அரசியல் பிரமுகர்கள் ஏராளமானோர் மீண்டும் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பணியமர்த்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்க்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.