தருமபுரி மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகிற அக்டோபர் 27ஆம் தேதி விழுபுரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு தருமபுரி மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம்
மாவட்ட தலைவர் தபா சிவா தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி N. ஆனந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய புஸ்ஸி ஆனந்த்,
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை குறித்து தமிழகம் மட்டுமல்ல உலக நாடுகளே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றது. தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை விளக்க மாநாடாக இது அமையும். இந்த மாநாட்டிற்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள தொண்டர்கள் மகளிர் உள்ளிட்ட துணை அமைப்பினர் தங்களது குடும்பத்தோடு கலந்து கொண்டு மாநாட்டை வெற்றி பெற வைக்க வேண்டும். இந்த மாநாட்டிற்கு வருகின்ற தொண்டர்கள் வாகனங்களில் வரும் போதும் அமைதியான முறையில் ஒழுக்க கட்டுப்பாட்டோடு வரவேண்டும். இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் தலைக்கவசம் அணிந்து வர வேண்டும். வாகனங்களில் நின்றபடி அங்கு இங்கு அலைந்தபடி மேலே ஏறிக்கொள்வது போன்ற ஒழுங்கீன செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது. தளபதியின் முதல் மாநில மாநாடு வெற்றி பெற வேண்டும். அதற்கு நீங்கள் முழுமையாக பாடுபட வேண்டும். ஒத்துழைப்பு தர வேண்டுமென கூறி தொண்டர்கள் குடும்பத்தோடு அணி அணியாக வரவேண்டும் என அழைப்பு விடுத்தார்.
முன்னதாக இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வருகை தந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திக்கு தருமபுரி மாவட்ட எல்லையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வரவேற்றனர்
மேலும் மாவட்ட அலுவலகத்தின் மாடியில் ஐந்து தமிழக வெற்றி கழக கொடியினை N. ஆனந்த் ஏற்றி வைத்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஏராளமான மாவட்ட நகர பேரூராட்சி கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.