பூதப்பாண்டி – அக்டோபர் – 14-
குமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்துள்ள கீரிப்பாறை லேபர் காலனியை சேர்ந்தவர் ஆமினா (62) இவர் ஓய்வு பெற்ற பால் வெட்டும் தொழிலாளி ஆவார். இவர் வீட்டில் ஆறு வெள்ளாடுகள் வளர்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அந்த ஆடுகளை மேய்ச்சலுக்காக வீட்டின் அருகில் விட்டுள்ளார். அப்போது அங்கே வந்த சிறுத்தை புலி ஒரு ஆட்டை தூக்கி செல்லும்போது கீரிப்பாறை ஆற்றில் குளித்து கொண்டு இருந்த பொதுமக்கள் பார்த்து அலறி அடித்து ஓடினர். பட்டபகலிலேயே சிறுத்தை புலி ஊருக்குள் வந்து ஆட்டை தூக்கி சென்றது அப்பகுதி மக்களிடையே பெரிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவத்தால் பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே வருவதற்க்கே அச்சமடைந்துள்ளனர். இது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.