மதுரை மாவட்டத்தில் வாட்டி வதைக்கும் கத்திரி வெயிலில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய எண்ணம் கொண்டு விரகனூர் கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பா.சந்திரன் ஏற்ப்பாட்டில் பொதுமக்களுக்கு சுவையான குடிநீர் மற்றும் மோர் தர்பூசணி பழம் போன்றவைகளை வழங்கினார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்த நிகழ்வின் போது ஊராட்சி செயலர் ராஜாமணி துணைத் தலைவர் கல்யாணி பிரபாகரன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.