ஈரோடு அக் 11
ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி பல்வேறு துறைகளின் சார்பில் 1,889 பயனாளிகளுக்கு ரூ.3.15 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது
ஈரோடு மாவட்டம் அரசின் திட்டங்களை முழுமையாக செயல்படுத்துவதில் முதன்மை மாவட்டமாக உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு, நம்முடைய மாவட்டத்தில் 43,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதேபோல் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல முறை ஈரோடு மாவட்டத்திற்கு வருகை புரிந்து நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். இதில் சோலார் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவில் சுமார் 12,000 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அரசு துறைகளின் சார்பில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களும் வழங்கப்பட்டு வருகிறது.
மக்களுடன் முதல்வர், உங்களைத்தேடி உங்கள் ஊரில் போன்ற திட்டங்கள் மூலம் பொதுமக்களிடத்தில் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. முதலமைச்சர் அவர்கள் ஈரோடு மாவட்டத்திற்கென பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ளார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று உயர்கல்விக்கு செல்லும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு புதுமை பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம்
தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் கல்லூரிகளில் மாணவ,
மாணவியர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ், அரசு பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவியர்களுக்கு காலை
உணவு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். மேலும்
இத்திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து நாள்தோறும் துறை உயர்அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு, அத்திட்டங்களை மேம்படுத்துவதற்கான
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா
அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் ஈரோடு மாநகராட்சி
ஆணையாளர் மனிஷ்
மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.