தென்தாமரைகுளம்., அக். 11.
உலக மனநல தினம் உலகம் முழுவதும் வருடம் தோறும் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி அனுசரிக்கப் படுகிறது. இதையொட்டி நேற்று கன்னியாகுமரி அருகே உள்ள அச்சன்குளம் பகுதியில் மனநோயளிகளுக்கான மனோலையா மனநல காப்பகதிலும் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மனோலையா நிறுவனர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மனோலையா இடைநிலை பராமரிப்பு இல்ல திட்ட ஒருங்கிணைப்பாளர் அரவிந்தன் வரவேற்புரை ஆற்றினார்.
மாவட்ட மனநல மருத்துவர் ஈனோக் விழிப்புணர்வுரை ஆற்றினார். அவரது உரையில் இந்த ஆண்டுக்கான கருத்தாக “பணியிடத்தில் மனநலத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய நேரம் இது”. என்று கூறினர். மேலும் பயனாளிகள் மருந்து மாத்திரைகளை வேளாவேளைக்கு ஒழுங்காக சாப்பிட வேண்டும் என்று கூறினார்.
நிறுவன ஊழியர்கள், பயனாளிகளுக்கு முறையான ஆற்றுபடுத்துதல் தொடர்ந்து வழங்க வேண்டும் என்று அறிவுரை கூறினர். மேலும் பயனாளிகள் தொழில் பயிற்சிகளை முறையாக பயிர்ச்சிபெற்று சொந்த வீடுகளுக்கு சென்று தொழில் செய்து வருமானம் ஈட்டி குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்று விழிப்புணர்வு கருத்துகளை வழங்கினார்.
முடிவில் மனோலையா காப்பக திட்ட ஒருங்கிணைப்பாளர் அரவிந்து கிருஷ்ணன் நன்றி உரை ஆற்றினார்.
விழாவினை தொடர்ந்து மனோலையா பயனாளிகளின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை மனோலையா ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.