மாவட்ட செயலாளர் எம்எல்ஏ காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் ஒன்றிய செயலாளர் கே.ஜே.பிரவீன் முன்னிலையில் இணைப்பு நிகழ்ச்சி
போகலூர், அக்.10-
ராமநாதபுரம் பாரதி நகர் வைஸ்ராய் ஹோட்டலில் மாற்றுக் கட்சியிலிருந்து 300க்கும் மேற்பட்டவர்கள் திமுகவில் இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சி திமுக ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் ஒன்றியம் மண்டபம் மேற்கு ஒன்றியம், திருவாடானை ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பாரத ஜனதா கட்சியில் இருந்து விலகி திமுக கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். பாரதிய ஜனதா கட்சியின் ராமநாதபுரம் ஒன்றிய தலைவர் சண்முகநாதன், ஒன்றிய பொருளாளர் கௌதம், திருவாடானை மேற்கு ஒன்றிய தலைவர் பிரபு, கிளைத் தலைவர்கள் பழனி, விக்கி, அலெக்ஸ் பாண்டியன், வசந்த், மகளிர் அணி சுமதி கற்பகம், கலாச்சாரம் பிரிவு ஒன்றிய தலைவர் முனீஸ்வரி, உட்பட பல்வேறு நிர்வாகிகள் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகி மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். மாவட்டச் செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் திமுகவில் இணைந்த அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி திமுக கட்சி கலர் சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் கூறி திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு சாதனைகளை அவர்களுக்கு விளக்கி கூறி அரசு நலத்திட்டங்கள் மக்களுக்கு தடையின்றி கிடைப்பதற்கு கட்சிப்பணி ஆற்றுவதற்கு தன்னை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் என்று கூறி வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஜே.பிரவீன், ராமநாதபுரம் நகராட்சி சேர்மன் கார்மேகம், துணைச் சேர்மன் பிரவீன் தங்கம், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.