தென்காசி மாவட்டம் பண்பொழி திருமலைக்குமாரசுவாமிதிருக்கோவிலில் பா.ம.க தலைவர் முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான மருத்துவர். அன்புமணி ராமதாசின் 57வது பிறந்த நாளை முன்னிட்டு தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் 57 – ஆவது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்ட பா.ம.க சார்பில் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அதன்படி மலை மேல் அமைந்துள்ள பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தனர் அதன் பின்பு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் சீதாராமன் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, மாநில துணைத் தலைவர் அய்யம்பெருமாள் பிள்ளை, மாநில செயற்குழு உறுப்பினர் சேது அரிகரன், மாவட்ட தலைவர்கள் குலாம், சுரேஷ்குமார், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சுசி.சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் ராஜேந்திரன், பால் நேரு (எ) கண்ணன், மாவட்ட துணைத் தலைவர் மகாதேவன், மாவட்ட சிறுபான்மை பிரிவு கெய்சர் அலி, மாவட்ட மகளிர் அணி தலைவி ஜெயக்குமாரி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் தமிழ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராம்குமார், நகர தலைவர்கள் செண்பககுமார், கருப்பசாமி, ஒன்றிய செயலாளர்கள் சங்கரநாராயணன், சண்முகசுந்தரம், சுரேஷ், செங்கோட்டை ஒன்றிய தலைவர் இசக்கிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.