நாகர்கோவில் அக்10
கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்சார வாரியத்தின் மின் கம்பங்கள் சரியான முறையில் பராமரிக்காததால் ஏரளாமான தீ விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன . அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணபதி நகர் பகுதியை சேர்ந்த ஜெபஸ்டின் என்பவர் வைத்தியநாதபுரத்தில் மரக்கடை நடத்தி வருகிறார் . நேற்று இரவு அப்பகுதியில் உள்ள மின் கம்பத்தில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு தீப்பொறிகள் காற்றில் பரந்தன. அப்படி பரந்த தீப்பொறிகள் அருகில் உள்ள இவரது மரக்கடையில் விழுந்து. தீப்பொறி விழுந்ததால் மரக்கடை முழுவதும் தீ மளமள என பற்றி எரிந்தது . எனவே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அனைத்தனர் .
தீயில் எறிந்து நாசமான மரக்கடையில் சேத மதிப்பு 25 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது . நாகர்கோவில் நகருக்குள் மின் கம்ப கசிவால் மரக்கடை தீப்பிடித்து எரிந்து வரும் சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது..