அரியலூர்,அக்10
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் ,பொன்பரப்பி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று வரும் (எம் பி சி) பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகள் மட்டும் தங்கி படித்து வரும் (ஹாஸ்டல்) விடுதியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள இந்த விடுதியில் மாணவிகள் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். அதில் மாணவிகள் கூறியிருப்பதாவது. நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள (ஹாஸ்டல்) விடுதியில் 50 பேர் தங்கி கல்வி பயின்று வருகிறோம். எங்களுக்கு போதுமான வசதிகள் ஏதும் விடுதியில் இல்லை மிகவும் முக்கியமான குடிப்பதற்கு குடிநீர் , கழிப்பிடத்தில் குடிநீர் இல்லாததால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். இதன் காரணமாக தினமும் பள்ளிக்கு கால தாமதமாக செல்லவேண்டிய சூழ்நிலை நிலவுவதால் பள்ளியின் முதல்வரின் தண்டனைக்கு உள்ளாகி வரும் சூழ்நிலை ஏற்படுகிறது. விடுதியில் மாணவிகளுக்கு வழங்கப்படும் உண்ணும் உணவு சரியான முறையில் இல்லை எனவும் குற்றச்சாட்டு. மேலும் விடுதியில் சுற்றுச்சுவர் சமூக விரோதிகளால் இடிந்து போய் உள்ளது. எனவே மாணவிகளின் விடுதியில் அடிப்படை வசதிகளையும் உணவு தரும் சமையல் கூடத்தையும் சீரமைத்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவியர் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
மேலே குறிப்பிட்ட விடுதியில் போர்க்கள அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் திங்கள் கிழமை அன்று பொதுமக்கள் மற்றும் மாணவிகளை ஒன்று திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என பொன்பரப்பி சமூக ஆர்வலர் இராயர் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்