சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் மடப்புரத்தில் அருள்மிகு ஸ்ரீ அடைக்கலம் காத்த அய்யனார் பத்ரகாளியம்மன் திருக்கோவில் உள்ளது.
இந்த திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும் இந்தக் கோவில் தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலாகும் இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி கும்பிடுவது வழக்கம் அந்த வகையில் இக்கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்கள் கொடுத்த காணிக்கை பணம் ராமநாதபுரம் அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன் மடப்புரம் அறநிலைய துறை உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் கணபதி ஆகியோர் முன்னிலையில்
எண்ணிக்கை துவங்கியது.
அந்த வகையில்
பக்தர்கள் உண்டியல் காணிக்கை வருமானம் ரூபாய் 37.64820 யும் தங்க நகைகள் 382 கிராம்
வெள்ளி 510 கிராமும் கிடைக்கப் பெற்றுள்ளது.
இதில்
மதுரை பக்தர்கள் சபை உறுப்பினர்கள் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டனர்.
உடன் கோயில் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.