ஊத்தங்கரை மே:3,
சென்னை வடபழனியை சேர்ந்த விக்னேஷ் வயது 27 என்ற இளைஞர் கோவை ஈஷா யோகா மையத்திற்கு செல்லும் வழியில் பலியானார்.
சென்னையில் இருந்து கோவை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை வடபழனியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் விக்னேஷ் (27) என்பவர் கோவை ஈஷா யோகா மையத்திற்கு சென்றுள்ளார் அப்போது செல்லும் வழியில் இன்று அதிகாலை சாமல்பட்டி என்ற இடத்தில் ரயிலில் உள்ள கழிவறையில் இருந்து வெளியே வரும் போது தூக்க கலக்கத்தில் கீழே தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே விக்னேஷ் என்ற இளைஞர் பலியானார்.
இறந்த இளைஞர் விக்னேஷின் உடலை சேலம் ரயில்வே கோட்ட போலீசார் அவரின் உடலை கைப்பற்றி சாமல்பட்டி ரயில் நிலையத்தில் வைத்துள்ளனர்.
இன்று அதிகாலையிலேயே இளைஞர் ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.