திண்டுக்கல் செய்தி
வன உயிரின வார விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் வனத்துறை சார்பாக பேரணி கட்டுரைப்போட்டி ஓவியப்போட்டி பேச்சுப்போட்டி வினாடி வினா உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன
திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலை சூழ்ந்த மாவட்டமாகும் வனத்துறைக்கு கட்டுப்பட்ட பகுதிகளில் பல்வேறு வன உயிரினங்களும் அறியவகை மரங்களும் அறியவகை மூலிகை தாவரங்களும் உள்ளன வன உயிரினங்கள் மற்றும் வளங்களை பற்றி பொதுமக்களும் மாணவ மாணவிகளும் அறிந்து கொள்ளும் வகையில் தமிழகம் முழுவதும் வருடா வருடம் அக்டோபர் இரண்டாம் தேதி முதல் 7 நாட்கள் வன உயிரின வார விழா நடைபெறுவது வழக்கம்
இந்த வருடமும் அக்டோபர் இரண்டாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை திண்டுக்கல் மாவட்ட வன கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மாணவ மாணவிகளுக்கு திண்டுக்கல் அருகே உள்ள அங்கு விலாஸ் மேல்நிலைப் பள்ளியில் பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி வினாடி வினா உள்ளிட்ட போட்டிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இப்போட்டியை மாவட்ட வனத்துறை அலுவலர் ராஜ்குமார் துவக்கி வைத்தார் மேலும் போட்டியில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும், சுழற் கோப்பைகளும் வழங்கப்படுகின்றன மாணவ மாணவிகள் வன உயிரினங்கள் மற்றும் வனத்தை பற்றி பேசுவதும் ஓவியங்கள் மற்றும் பேச்சுப் போட்டிகள், , வினாடி-வினா கட்டுரை போட்டிகள் நடைபெறறது
இந்நிகழ்ச்சியில்
உதவி வனப் பாதுகாவலர் வேல்மணிநிர்மலா,வனச்சரக அலுவலர்கள் சிறுமலை சரகம் மதிவாணன், ஒட்டன்சத்திரம் சரகம் ராஜா, கன்னிவாடி சரகம் ஆறுமுகம், நத்தம் சரகம் ஜெயசீலன், அய்யலூர் சரகம் மணிகண்டன், மற்றும் சிவா, பாஸ்கரன், வெனிஸ், கிருஷ்ணகுமார்,உட்பட வனவர்கள் வனப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்
மேலும் கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கன்னிவாடி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பதாகையுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வன உயிரினங்களை பற்றி கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக கன்னிவாடி வனச்சரக அலுவலகத்திற்கு வந்தடைந்தனர்.