பொள்ளாச்சி அக்: 09
கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மனித உரிமை துறையின் சார்பில் பொள்ளாச்சி சுப்பிரமணியசுவாமி கோயிலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மனித உரிமை துறை மாநில தலைவர் மகாத்மா சீனிவாசன் அவர்களின் பிறந்த கொண்டாடப்பட்டது. கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மனித உரிமை துறை தலைவர் கராத்தே டாக்டர்.எஸ். பஞ்சலிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 200 மேற்பட்ட பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஓபிசி மாநில செயலாளர் ரவிக்குமார் அவர்கள் முன்னிலை வகித்தார். ஆனைமலை கிழக்கு வட்டாரத் தலைவர் திருமதி வள்ளிநாயகம் அவர்கள் வரவேற்புரையாற்றினார். மேலும் மாவட்ட துணை தலைவர்கள் கலாவதி, மகேஸ்வரன், பொள்ளாச்சி எட்டாவது வார்டு தலைவர் கிருஷ்ண பிரசாந்த், மாவட்டத் துணைத் தலைவர் ரவி சேகர் , கிணத்துக்கடவு குறிச்சி நகரத் தலைவர் ரங்கராஜன்,மாவட்ட செயலாளர் கிருஷ்ணராஜ் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் கோவை தெற்கு மாவட்ட அனைத்து பகுதிகளிலும் ஏழை, எளியோருக்கு உணவு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.