தஞ்சாவூர். அக்.9.
தஞ்சாவூர் பாரத் அறிவியல் மற்றும் நிர்வாகவியல் கல்லூரி வளாகத் தில், மாவட்ட நிர்வாகம் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் உயர்கல்வி பயிலும் மாணவர்களு க்கான கல்வி கடன் வழங்கும் முகாமில் 68 மாணவர் மாணவியர்களுக்கு ரூபாய் 5.38 கோடி கடன் உதவி வழங்கப்பட்டது
மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்ற முகாமில் 12 வங்கிகள் கலந்து கொண்டன .இதில் 128 மாணவ மாணவியர்கள் விண்ணப் பம் செய்தனர் .இவர்களில் 68 பேருக்கு ரூபாய் 5.38 கோடி மதிப்பிலான காசோலைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கிப் பேசினார்
அப்போது அவர் கூறியதாவது:
மாவட்டத்தில் நிகழ் நிதியாண்டில் இதுவரை 919 பேருக்கு ரூபாய் 10.80 கோடி வங்கி கடன் உதவி வழங்கப் பட்டுள்ளது.நிகழ் நிதியாண்டில் மேலும் 4 ஆயிரம் பேருக்குவங்கி கடன் உதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது தமிழக முதல்வரின் ஆணைப்படி உயர் கல்வி படிப்பதற்கு ஊக்கப்படுத்து வதற்காக இது போன்ற வங்கிக் கடன் உதவி முகாம் நடத்தப் படுகின்றன.
இதை மாணவ மாணவியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர்.
முகாமில் மக்களவை உறுப்பினர் முரசொலி மேயர் சண். ராமநாதன் மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மண்டல மேலாளர் நாகேஸ்வரராவ் முன்னோடி வங்கி மேலாளர் பிரதீப் கண்ணன் பாரத் கல்வி குழும செயலர் புனிதா கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்