அரியலூர், அக்;09
அரியலூர் மாவட்ட நகரில் திமுக அரசைக் கண்டித்து அரியலூர், ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், வரதராசன்பேட்டை ஆகிய பகுதிகளில் அதிமுக சார்பில் மனிதச் சங்கிலிப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விலைவாசி மற்றும் சொத்து வரியை உயர்த்திய திமுக அரசைக் கண்டித்து அரியலூர் அண்ணா சிலையில் இருந்து சத்திரம் வரை நடைபெற்ற மனிதச் சங்கிலிப் போராட்டத்துக்கு, அதிமுக மாவட்டச் செயலரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்தார்.முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் இளவரசன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் இளவழகன், மாவட்ட பொருளாளர் அன்பழகன், நகரச் செயலர் ஏ.பி.செந்தில், மாவட்ட அம்மா பேரவைச் செயலர் ஒ.பி.சங்கர், இணைச் செயலர் நா.பிரேம்குமார், ஒன்றியச் செயலாளர்கள் செல்வராஜ், பாலசுப்பிரமணியன், வழக்கறிஞர்கள் அணி நிர்வாகிகள் ராமகோவிந்தராஜன், செல்ல சுகுமார், முன்னாள் அரசு வழக்கறிஞர் சாந்தி, மகளிரணிச் செயலர் ஜீவா அரங்காநாதன் உள்ளிட்ட 1000 பேர் கலந்து கொண்டனர்.
இதே போல் ஜெயங்கொண்டத்தில் மனிதச் சங்கிலிப் போராட்டத்தக்கு, அக்கட்சியின் நகரச் செயலர் செல்வராஜ் தலைமை வகித்தார். முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் ராமஜெயலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
உடையார்பாளையத்தில், பேரூர் கழகச் செயலர் அழகேசன், வரதராசன்பேட்டையில் நகரச் செயலர் ஸ்டீபன் ஆகியோர் தலைமையில் மனித் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்